முத்து: நிரலாக்க மொழி பற்றி பேசலாமா? 😊

தமிழ் வளவன்: நிரலாக்க மொழி என்றால் என்ன?

முத்து: நிரல் என்றால் நிகழ்ச்சி இதை ஆங்கிலத்தில் புரோகிராம் ( program ) என்று பெயர், மொழி என்றால் உங்களுக்கு தெரிய வாய்ப்பு இருக்கிறது, நீங்கள் நினைத்தது போல் அது ஆங்கிலத்தில் லாங்குவேஜ்( language) என பெயர் .

நிரல் + மொழி = நிரல் மொழி
program + language = program language

நிரலாக்கம் + மொழி = நிரலாக்க மொழி.
programming + language = programming language.

முத்து: நிரலாக்கம் (programming ) என்றால் என்ன ?

தமிழ் வளவன்: programming என்றால் set of instruction,

முத்து: நிரலாக்கம் என்றால் கட்டளைகளின் தொகுப்பு(set of instruction ), மிக அருமையான பதில், சரி ,,,,, யார் , யாருக்கு இந்த கட்டளைகளை அனுப்புகிறார்கள் ?.

தமிழ் வளவன்: programming instruction என்றாலே , மிஷின் கிட்ட கம்யூனிகேட் பண்றதுக்காக.,,,

முத்து: அருமை, கட்டளைகளின் தொகுப்பு (set of instruction) என்றால் ஒரு மனிதன் கணிப்பொறியுடன் தொடர்பு கொள்வது அல்லது பேசுவது.